கல்லறையும் கண்ணீரும் கலந்த வரலாறு 555

***கல்லறையும் கண்ணீரும் கலந்த வரலாறு 555 ***


என்னழகே...


வரலாற்றை
புரட்டி பார்த்தேன்...

பலரின் ரத்தத்தில் உருவான
வரலாறு மன்னரின் வரலாறு...

காதலை
புரட்டி பார்த்தேன்...

பலரின் கல்லறையும்
கண்ணீரும் கலந்த வரலாறு...

கண்ணீரையும் வரவேற்க தினம்
பூத்து கொண்டுதான் இருக்கிறது...


காதல்
மலர் பலரின் இதயத்தில்...

உன் மீதான காதல்
எனக்குள்ளும் பூத்தது...

என் காதல் பூத்து
குலுங்கும்
நந்தவனமா இல்லை...

கண்ணீர்
கலந்த வரலாறா...

நீ சொல்லும்
வார்த்தையில் தானடி உள்ளது...

என்
காதலின் வரலாறு.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (29-Sep-20, 9:33 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 631

மேலே