வககன்னியப்பன் குறட்பாக்கள்
அளவான ஆசையுடன் ஆன்றகுணம் சேர்ந்தால்
வளம்பெறுமே நம்முடைய வாழ்வு! 1
நற்குணம் ஓங்கிட நற்றமிழ் ஒண்குறளைக்
கற்றிடுவீர் உள்ளங் களித்து! 2
பயனில சொல்லிப் பதடியெனச் சுற்றல்
நயனாமோ நன்றோ நவில்! 3
தாழ்வு மனப்பான்மை தைரியமாய் நீக்கியே
வாழ்வில் பெறுவீர் வளம்! 4
மால்முருகா உன்னை மனமுருக வேண்டுகிறேன்
வேல்கொண்டு கா,வா விரைந்து! 5
தெய்வம் உளதென்ற தீராத உள்ளுணர்வு
செய்திடும் எல்லாச் சிறப்பு! 6
குலம்நாடிப் பெண்ணெடுத்துக் கொள்ளாத வாழ்வில்
நலமோடிப் போகும் நவில்! 7
நல்லவரை நாடியே நட்பினைப் போற்றிவர
வெல்லுமுன் எண்ணம் விரைந்து! 8
ஆற்றங் கரையோரம் அன்னத்தைக் கண்டுவந்(து)
ஏற்றமுடன் வாழ்வேன் இனிது! 9
கண்ணொடு கண்கலந்து காதலித்(து) எங்களின்
எண்ணம்போல் வாழ்வோம் இசைந்து! 10