அவள் கண்கள்
நல்லவை எவை எவை அத்தனையும்
பார்த்து ரசித்து மனம் மகிழ
இன்புறத்தான் மனிதற்கு கண்களை
முகத்தில் வைத்தானோ இறைவன்
என்று எண்ணுகையிலேயே அவள்
அந்த பேரழகி என்கண்முன்னால் தோன்ற
என் கண்களுக்கு நல்ல விருந்தானாள் அவள்
விருந்தானாள் அவளின் காந்த கன்களால்
என் கண்களுக்கே நம்ப முடியவில்லை
ஒரு பெண்ணின் கண்களுக்கு இப்படியோர்
தனிப்பெரும் அழகா .... பேசும், பாடும்
சிரிக்கும் அபிநயம் புரியும் அந்த
நான் கண்டு ரசிக்கும் அந்த கண்கள்