கண்ணன் என்னும் பேரழகு

கோபியர் மனதை காந்தமென கவர்ந்த
ஒப்பிலா பேரழகு கண்ணனெனும் கருமாணிக்கம்
ஒப்பிலா அப்பன் இவன் பரமபுருடன்
அழகென்றால் மூவுலகிற்கும் இவனே அழகன்
அழகனும் இவனே அசுரரை மயக்கிய
மாயா அழகியும் இவனே மோகினி
கண்ணன் என்னும் தெய்வமவன் தெய்வத்தின் தெய்வம்
பரமபுருடன் அவன் மற்றோர் எல்லாம்
இவனுக்கு பெண்ணே அதனால் அல்லவோ
சடகோபனும் கலியனும் வைணவப்ரபந்தங்களில்
தம்மை பெண்ணாகவே பாவித்து கண்ணன்மேல்
தமிழ் மறையாம் பாசுரங்கள் இயற்றினார்
ஆணில்லை கண்ணன் பெண்ணும் அல்லன் அலியும்
துதிப்பர் மனதில் எதுவோ அதுவே
இவன் அதுவே இவன் கலியாணகுணம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Oct-20, 1:51 pm)
பார்வை : 1538

மேலே