இனி ஒரு விதி செய்வோம்

சேலைமீது முள் பட்டாலும்
முள் மீது சேலை பட்டாலும்
சேலைதான் கிழிகிறது
கண்ணாடிமேல் கல் விழுந்தாலும்
கல் மேல் கண்ணாடி விழுந்தாலும்
கண்ணாடிதான் உடைகிறது
பெண்ணோடு ஆண் சென்றாலும்
ஆணோடு பெண் சென்றாலும்
பெண்தான் பாதிப்படைகிறாள்
விழிப்போடு சிந்தித்து
விதியை மாற்றிடுவோம்
இனியாவது ஒருமுறையேனும்
முள்ளின் முனை நொறுங்கட்டும்
கல் உடைந்து சுக்குநூறாகட்டும்
ஆணின் அற்பச்செயல்
தண்டனைக்குள்ளாகட்டும்