கரங்கள்

மனிதனுக்கு மட்டுமே கரம் தந்தான்
பணிவுடன் சிரம் தாழ்த்தி கரம்கூப்பி
நம்மைப் படைத்த இறைவனை துதிக்க
இல்லாதார் குறைதீர வாரி வழங்க
நன்மை செய்யாது போயினும் ஒருபோதும்
நம்கரத்தால் தீமை செய்யாது இருக்க
எளியோரைக் காக்க என்றும் கரங்கள்
தீயோரை அடித்து துரத்திட நல்லோரை
வல்லோர் என்றும் காத்திட கரங்கள்
கரத்தால் இறைவன் நமக்கு அளிப்பது
அபாயம் அதை கரம்கூப்பி வாங்கிக்கொள்ள
இறைவன் நமக்கு தந்த கரங்கள்
ஆக்கத்திற்கே என்றும் கரங்கள் அழித்தலுக்குஅல்ல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Oct-20, 9:52 am)
Tanglish : karankal
பார்வை : 79

மேலே