காத்திருப்பு

காத்திருப்பு

எதிர்பார்த்துகாத்திருப்பதிலேயே
காலம் கரைந்துபோவது
கரைந்து தேய்ந்தபின்தான்
தெரிகிறது

காத்திருப்புவாழ்நாளின்
பாதியை எடுத்துக்கொள்கிறது.
எதற்குஎன்று
புரியாமலேயே !

பாலகத்தில்காத்திருந்தது
ஏழ்மையை பொறுத்தே
அமைந்தது,

உணவுக்காகவும்
உடைக்காகவும்
இளமையில்காத்திருப்பு

இனிமையாய்
இருந்ததுகாதலிக்கும்வரை !

கடுகடுப்பாய்மாறியது
கல்யாணமானபின் !

குடும்பத்திற்காகவும், பொருளாதர
வசதிகளுக்காகவும்
பிள்ளைகளின்எதிர்கால
நலன்வேண்டி

நடுவயதில்காத்திருப்பு
வாழ்க்கையின்
போராட்டம்

எல்லாம்முடிந்தபின்னும்
காத்திருக்கிறேன்

காலனை வேண்டி
நான்மட்டுமல்ல என்னை
சுற்றியுள்ளோரும்

காத்திருக்கிறார்கள்
எனக்காக !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Oct-20, 11:09 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 132

மேலே