செல்லாக்காசு
பொன்னால் செய்யப்பட்ட
குடம் உடைந்தாலும்
அதன் மதிப்பு குறையாது
ஆனால்...மண் குடம்
உடைந்து விட்டால்
மதிப்பில்லாமல் போகும்..!!
அதுபோல் தான் சான்றோர்கள்
தன் நிலை தாழ்ந்தாலும்
அவர்களின் மதிப்பு குறையாது
ஆனால் மற்றவர்களுக்கு
தங்கள் நிலை தாழ்ந்தால்
அவர்களின் மதிப்பு குறைவதோடு
செல்லாக்காசாக ஆகிவிடுவார்கள்...!!
--கோவை சுபா