சூரிய நமஸ்காரம்

"ஆயிரம் கரங்கள் சேர்ந்தால் கூட,
ஆதவனை மறைக்க முடியாது,

ஆயிரம் கதிர்கள் கொண்டு,
அவன் ஒளிர்வதை எவரும்
தடுக்க முடியாது,

அது கொதித்தாலும்,
உலகம் விழிப்பதை கெடுக்க முடியாது,

அது உதிக்காமல் செய்து முடுக்கவும் முடியாது ,

ஞாயிறு இல்லை என்றால் ,
ஞாலத்தில் எதுவுமே இல்லை.

கதிரவன் இல்லையென்றால்?,
அவன் கதிர் இல்லை என்றால்?,

விழித்திருக்க, விழி திறக்க ஒளியுமில்லை,

வாழ்ந்திருக்க, வாய்திறக்க
ஒலியும் இல்லை,

உடல் வாழ அவன் வேண்டும்,
கடல் வாழ அவன் வேண்டும்,

பயிர் வாழ அவன் வேண்டும்,
நம் உயிர் வாழ அவன் வேண்டும்,

அவனது இயக்கம் நின்று விட்டால்,
உலகமே சுற்றாமல் தயக்கம் கொண்டு விடும்.

பின் இயற்கை தழைப்பதேது?
பூமி செழிப்பதேது?
உயிர்கள் பிழைப்பதேது?

முடியாது!

முடிந்து விடாது அவன் தேவை,
முடிவே இல்லாதது என்றும் அவன் சேவை!".

-------

LAKSHIYA

எழுதியவர் : Lakshya (10-Oct-20, 10:53 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 43

மேலே