பள்ளி முடிந்தது

"பள்ளி முடிந்தது "மனதில்
பட்டாம்பூச்சி எழும் தருணம்
இவ்வார்த்தை கேட்கும்போது அரைக்கை
சட்டையும் டவுசரும் அணிந்து
சேட்டை செய்யும் வயதில் !

இன்றோ அதே வார்த்தை
செவியை அடைந்தவுடன், காலம்
சிகரத்தை கடந்து செல்லும்
முகிலைப் போல் சட்டென
சென்றதை உணர்த்தி செல்கிறது !

நொடிகள் சற்று தாமதித்தாலும்
பொறுக்காத நெஞ்சம் மணி
நேரங்கள் அதிகரித்தாலும் சற்றே
இருந்து செல்ல துடிக்கிறது !

திடமாக செழித்திருக்க பத்து
திங்கள் சுமந்திருந்தால் தாய் !
பிறவி பயன்பெற பதினான்கு
ஆண்டுகள் சுமந்தது பள்ளி !

கருவறையில் மென்மையாக உருவாகி
வகுப்பறையில் பலம் அடைந்தோம்!

தோளோடு தோள் சேர்ந்து
திறமைகள் வெளி கொணர்ந்து
லேசான மனதுடன் சமூகத்தில்
இல்லை என்றாலும் வகுப்பறையில்
ஓர் சமூகமாக வாழ்ந்திருந்தோம் !

புத்தகத்தில் உயிரியல் கற்றோம்
வேதியல் கற்றோம் இயற்பியல்
கற்றோம் கணிதம் கற்றோம்
தோழமையில் மனிதம் கற்றோம்

பாரதிக்கு புரட்சி காந்திக்கு
அகிம்சை ஆழிக்கு உப்பு
எங்களுக்கோ நட்பு !

குளிர் தென்றலை போர்த்தி
உயிர்கட்கு சுகம் தந்து
புவிக்கு உயிர் தரும்
மழை -உருவாக தேவை
சுடர்விட்டு சுட்டெரிக்கும் சூரியன்.

நாங்கள் மழை ஆக்கம்
தரும் சூரியன் ஆசான்கள் !

பலம் பொருந்தி பிழைத்திருக்க
நகமுடைத்து அலகுடைத்து சிறகுடைத்து
நொறுங்குண்டு இருக்கும் கழுகு !

பின் புது பெலத்துடன்
பரந்த ரெக்கை விரித்து
கண்டகள் கடந்து கடல்
கடந்து பறந்து செல்லுபோல்

இன்று இறுக்க மனதுடன்
இறுதிநாள் பள்ளி முடித்து
இரப்பை மூடி விழியோரம்
ஈரத்துடன் இல்லம் செல்கிறோம்!

வானில் வளைந்திருக்கும் வானவில்லாய் !
வயலில் விளைந்த பயிராய் !
விண்ணில் பாயும் பிஎஸ்எல்வியாய் !
கிழக்கில் உதிக்கும் கதிரவன்போல்
வான் அளவு உயர்ந்திருப்போம் !

மீண்டும் எங்கள் பள்ளிக்கு
மிளிரும் நினைவுடன் வருவோம்
முன்னாள் மாணவர்களாய் அல்ல
விழாக்களை முன்னின்று நடத்திவைக்க !

எழுதியவர் : சௌ.போவாஸ்ராஜன் பொற்செழிய (9-Oct-20, 3:07 pm)
சேர்த்தது : boazrajan p
Tanglish : palli mudinthathu
பார்வை : 554

மேலே