சோக ராகம்
சோகம் அலைமோதும் போது
பேச வார்த்தைகள் இல்லை
தெய்வமும் உதவாத போது
பக்திக்கும் பலன் இல்லை
காயங்கள் தாங்கும் நெஞ்சம்
துடிப்பதில் என்ன வியப்பு
கண்ணீர் பெருகும் வேளை
தாகத்திற்கும் இல்லை மதிப்பு
வாடைக்காற்று வீச
வாழ்க்கை பாடம் படிக்க
வாசல் வந்த சொந்தம்
நிம்மதியை விலையாய் கேட்க
அன்புச் சுவடுகள் தாங்கும்
கன்னத்தில் முத்தமும் பெரும்
சுமையாக
மொத்தத்தில் பாரம் கூட
வண்டிமாடு போலாகிப்போனேன்
வாயில் நுரை தள்ள
சேரும் இடம் இன்னும் வரவில்லை
தேரும் நிலை சேரவில்லை...