சின்ன இதயம்

சின்ன இதயத்தை பங்குபோட
விருப்பமில்லாமல்
எத்தனைமுறை மறைத்திருப்போம்
ஓடியிருப்போம் ஒளிந்திருப்போம்

சின்ன இதயத்திற்குள்
எத்தனை எத்தனை உறவுகளை
சுமந்திருப்போம் ஒரு கட்டத்தில்
கடந்தும் வந்திருப்போம்

சின்ன இதயம் என்பது தெரிந்தும்
எத்தனை கவலைகள் மகிழ்ச்சிகள் நெருடல்கள் சிந்தனைகள்
விவாதங்கள் என சுமைகளை ஏற்றி
வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்

சின்ன இதயத்தின் பரந்த
மனப்பான்மையை உணராமலே
பகிர்தல் நல்லது என்பதை
நிதானிக்காமலே
இறுதியையும் முடிக்கிறோம்
சுயநல விருப்பத்தோடு...

எழுதியவர் : மேகலை (20-Oct-20, 10:00 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : sinna ithayam
பார்வை : 101

மேலே