பொய்யுடன்உன் புன்னகை கூட்டணி வைத்தால்

பொய்யில் ஒருபுதுமை செய்தேன் அதுகவிதை
உன்புன்ன கைப்புதுமை யோசிந்தும் தேனமுதை
பொய்யுடன்உன் புன்னகை கூட்டணி வைத்தால்
தமிழ்த்தேர்த லைவெல்லா தோ !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Oct-20, 8:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே