அறிந்து தெளியலாம்

அறிவின் அடர்த்தி அனைத்தையும் மாற்றும்
ஆடம்பரத்தை நாடினால் அவச்சொல் அணைக்கும்
இயல்பில் தோன்றியதை எதுவும் மாற்றாது
ஈதல் குணங்கொண்டோர் இறைக்கு இணையாவர்
உண்மை என்பது வீசும் காற்றுக்கு ஒப்பது
ஊற்றில் நீர் வேண்டின் வான் மழை வேண்டும்
எளிதில் வருகின்ற எதுவும் உறுதி கொள்வதில்லை
ஏழை, கோழை என்பது கைக்கொள்ளும் முயற்சியே
ஐம்பூதங்களின் ஆளுமையே அனைத்தையும் இயக்கும்
ஒற்றினை ஒன்று ஒருங்கிணைத்தே இருக்கும்
ஓதுதல் இன்றி உயிர் வாழ்தல் பிழையாம்
ஒளருவவிரதியாய் உறுதி மனம் பழகுதல் நலம்
பெரியோர் என்பது பொது நலம் பேணல்
பெரியது நோக்கின் யாதும் பொதுவாம்
சினங்கொள்ள வேணின் நலங்காக்க வேண்டும்
செருக்கின் இறுதி சிதைவடைந்து போகுதல்
பாசத்தின் கவசம் பாதுகாக்கும் செயலே
நட்பின் உறுதி நஞ்சையும் பகிர்ந்துண்ணல்
பிள்ளைகள் என்போர் முன் செய்த வினையெச்சம்
சொத்தும் பற்றும் கதிரொளி போன்றதே
-------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (23-Oct-20, 9:54 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 62

மேலே