அவள்
அன்னம் நடக்க மறக்க மயிலாட மறக்க
தேன்மலர் சோலைக்குயிலும் கூவமறக்க
என்னதான் இங்கு நடக்கிறது என்று
எண்ணும்போது எண்ணத்தையும் கிழித்து வந்தாள்
என்னவள் என்னைத்தேடி சோலைக்குள்
அன்னமாய், மயிலாய் குயில்போல பாடி