தாய் தந்தை
---------------
இருக்கும் வரையேனோ
இளக்காரம் இவர்களிடம்..
நம்மை பிரிந்து
எங்கு செல்ல
போகிறார்கள் என்று..
இழந்த பின்பேனோ
இதயம் இறுக்கமாகும்
இளக்கார நிகழ்வெண்ணி..
இன்னும் தன்னன்பை
இருவரும் மகிழ்ந்துணர
கொட்டி இருக்கலாமோவென..
இருக்கும் இருவருக்கும்
இளக்காரம் தவிர்த்து நீ
இன்று காட்டும் அன்பு
இனிதினும் இனிது..
வெற்றிடம் பார்த்து
இவர்களை நினைத்துவுன்
நாளைய அழுகை
கொடிதினும் கொடிது..
---------------
சாம்.சரவணன்