கொஞ்சங்கூட கருணையின்றி கடத்திவிட்டாய்!

கொஞ்சங்கூட கருணையின்றி கடத்திவிட்டாய்!
கண்களாலே குத்தியென்னை கொன்றுவிட்டாய்!
சிரிப்பாலே எனை சிறையில் ஏற்றினாய்...


பிறப்பென்ற கடலில் வீழ்ந்தவன் நான்
இறப்பென்ற கரையை அடையவில்லை
உன்முகத்தில் என் கரையை பார்க்கிறேன்!

எதனால் இது எதனால்-இந்த
வாழ்வில் இது எதனால்
வயது செய்யும் வேலையா?

காதல்பற்று உன்னால் கொண்டேன்
காயம்பட்ட எந்தன் நெஞ்சில்
காதலெனும் மருந்தை என்னுள் ஊற்றிடு!


கடலினிலே அலையாய் நீயும்
அலைகளிலே நுறையாய் நானும்
நீயின்றி எந்தன் வாழ்வும் ஏதடி!

சதிசெய்து என்னுள் நீயும்
கலவரத்தை வந்து தெளித்தாய்
இதயம் மௌனத்திற்கிடையில்
சண்டைவந்து வெட்டிக்கொள்ள
கண்டுங்காணா பெண்ணாய் தூரம் நின்றாயே!

எழுதியவர் : Sahul Hameed (8-Nov-20, 9:07 am)
சேர்த்தது : HSHameed
பார்வை : 143

மேலே