தீபாவளி வாழ்த்து கவிதை

மனம் மகிழும் தீபாவளி

பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி
தீபாவளியில்
மாப்பிள்ளை களுக்கு மகிழ்ச்சி
தலை தீபாவளியில்

அறிவுள்ள பண்டிகை
அஜீத் குமார் விரும்பும்
பண்டிகை
எது என்றால் அதுதான் தீபாவளி
ஏனென்றால் இப்பண்டிகையில்தான்
தலை தீபாவளி கொண்டாடுகிறோம்


தீபாவளி என்றால்
குளித்து மகிழ
குழந்தைகளின் தலையில் எண்ணெய் வைப்பார்கள்
உண்டு
களித்து மகிழ
வாழை இலையில்
வெண்ணை வைப்பார்கள்

காரங்களுக்கு பதில்
அன்று பெரியவர்களுக்கு பலகாரங்கள்

ரசம் மட்டுமே சாப்பிட்ட
மக்கள் எல்லாம்
அன்று அதிரசம் சாப்பிடுவர்

அன்று பூக்களின்
மணத்தை விட இனிப்புகளின் மணமே பெண்களின் மனதை மகிழ்விக்கிறது

தீபாவளி யில் மகிழ்ச்சி
புத்தாடை அணிவது
மட்டுமல்ல
வெள்ளாடை
சுவைப்பதும்தான்

அன்று மல்லிகைப்
பூக்கள் பொறாமை கொள்ளும் மத்தாப்புகள் வெடிப்பதை கண்டு

தொழிலாளியின்
சின்னச் சின்ன
வலிகளுக்கு எல்லாம்
இந்த தீபாவளி போனஸ்
மருந்தும் இடுகிறது
விருந்தும் இடுகிறது

பட்டாசு தொழிலாளிகளின்
இருண்ட
வாழ்க்கையில்
தீபாவளி
தீப ஒளியாய்
விளக்கேற்றி வைக்கிறது

அன்று பட்டின்
மதிப்பை விட
பட்டாசுகளுக்கு தான்
மதிப்பு அதிகம்

தீபாவளி சூரனின்
கோபம் அழிந்த நாள்
உலகெங்கும் தீபம்
வழிந்த நாள்

பட்டாசு தன் மரணத்தில்
பிறரை மகிழ்விக்கும்
நாள் இந்த தீப ஒளி திருநாள்

பூனை உறங்கும்
அடுப்புகளில் கூட
பானை இறங்கும்
ஒரு நாள் அது
தீபாவளி திருநாள்

வியாபாரிகளுக்கு
அள்ளிக்கொடுக்கும்
பாரி தீபாவளி

அனைவரின்
மனதை மகிழ்விக்கவே
வரும் நாள்
இன்பத்தைத் தரும் நாள்
ஆண்டுக்கு ஒருநாள்
நரகாசுரன் அழிந்த பெருநாள்
வெள்ளிக்கு மறுநாள்
வருவதுதான் இந்த
இன்பம் பொங்கும்
தீபாவளி திருநாள்

அனைவருக்கும் இனிய
தீபாவளி வாழ்த்துக்கள்

எழுதியவர் : புதுவை குமார் (8-Nov-20, 6:01 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 320

மேலே