போராட்டக்குணம்

வாழ்க்கை என்னும்
போராட்டக்களத்தில்
வாழ வேண்டுமென்று
முனைப்புடன்
தினம் தினம் போராடி
வாழ்கின்ற
நாம் அனைவருமே
போராளிகள்தான்..!!

சில சமயங்களில்
வெற்றி பெறுகிறோம்
மகிழ்ச்சி கொள்கிறோம்

பல நேரங்களில்
தோல்வி அடைகிறோம்
துவண்டு போய்விடுகிறோம்

ஆனால்...
தோல்வி அடைந்தால்
மனம் தளராமல்
"பீனிக்ஸ்" பறவை போல்
மீண்டும் எழுந்து நின்று
போராடி வெற்றி
கொள்ள வேண்டும்

நம்வீழ்ச்சி என்பது
வாழ்வின் முடிவில்தான்
இருக்க வேண்டும்
வாழ்வில் இருக்கக்கூடாது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Nov-20, 7:14 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 2026

மேலே