மந்திரிகள்
மந்திரிகள்
நேரிசை வெண்பா
இன்று அரசர்கள் இல்லாக் குறைதீர்க்கத்
தின்றிடும் மந்திரிகள் கூட்டமுண்டு -- அன்றைய
மந்திரி வேந்தை இடிக்கும் கடப்பாரை
விந்தைசுருட் டல்செய் திலை
நேரிசை ஆசிரியப்பா
பரங்கிமன்னர் பாரதம் ஆண்டார் உண்மை
போராட் டத்தால் பெற்றோம் சுதந்திரம்
அரசு தத்துவம் விடுத்து மந்திரி
பறித்தார் பலத்தை கேட்கவோர் பார்லிமென்ட்
அரசன் போல் தண்டிப் பாரிலை
நல்லதும் கெட்டதும் அன்று காட்டவும்
மதிமந்திரி அரசனுக்கு நல்லக் கையாள்
மன்னரின் சரிபாதி வேலையை புரிந்தார்
ஆன்றோர் நீதிமான் பிரபுகள் சான்றோர்
மன்னரின் துணையங் கங்கள் என்றார்
கண்காணித் தார்வொரு வரையொருவர்
கண்காணிப்பில் நாடு முன்னேறி செழித்ததே
.....