சிரிப்பு வரும்

பக்கபக்கமாய் வாழ்க்கை நிரப்பி பயனென்ன...
திரும்பும் பக்கமெல்லாம் திருடர்கள் இருக்க பயமென்ன ?

பிறக்கும் கணமே இறப்பின் தேதி சுமப்பதற்கு பெயரென்ன?
அழியும் உடலை காத்துக்கொள்ள அனைவருக்கிருக்கும் ஆசையென்ன..?

திங்கள் வரும் வெள்ளி வரும்
விடிந்தால் பிறப்பு இறப்பு வரும்

இதையெல்லாம் நினைத்தால் சிரிப்பு வரும்..

-ஜாக்

எழுதியவர் : ஜாக் (9-Nov-20, 8:03 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : sirippu varum
பார்வை : 95

மேலே