ஹைக்கூ
நொடிக்கொருமுறை என்னை முறைக்கின்றான்
நீயனுப்பும் குறுஞ்செய்திகளை
நான் முழுங்குவதாய் நினைத்து!
***
இராவெல்லாம் காதல்மொழி நீங்கள் பேச
சூடாவது என்னவோ நான்தான்
நாள் முழுவதும் சார்ஜரில்!
***
இடைவேளை கொஞ்சம் தாருங்கள்
முத்த மழையில் குளித்தநான்
கொஞ்சம் துவட்டிக்கொள்கிறேன்!
***