கம்பீரமாய் வெற்றியை சேகரிப்போம்

வெற்றியை சேகரிப்போம்
கம்பீரமாய்
தோல்வியை கால்மிதிப்போம்
சீக்கிரமாய்
அடங்காத காளை இது
அடக்கத்தான் ஆளேது
வருங்காலம் உன் கையில்
எழுதுவோம் புது மையில்

நிமிர்ந்து வா
காற்று சிக்காது
துணிந்து வா
வானம் தடுக்காது
தடுக்க யார்வருவார்
தகர்த்து நீ எறிவாய்

சீக்கிரம் வா
புன்னகை கொடு
தீபம் ஒளியேற்றி
திருவிழா எடு
தீக்குச்சி எரி(றி)ந்தால்
அணைத்திடுவோம்
தீவைத்த இதயங்களுக்கு
தண்ணீர் விருந்து படைத்திடுவோம்

நீ புன்னகையை
உருவாக்கு
அது உன்னையே
உருவாக்கும்...

இளம் கவியரசு : அப்துல் பாக்கி

எழுதியவர் : (16-Nov-20, 7:28 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 25

மேலே