முகநூல் பதிவு 192
புதுச்சேரியில் கண்ட அதிசயம்......
இந்தியா முழுதும் இப்படியே இருந்தால்......
மத நல்லிணக்கம் என்பது என்ன?
மத நல்லிணக்கம் என்பது மக்களிடையே நட்பை, அன்பை, அமைதியை உருவாக்கக் கூடியது. மத நல்லிணக்கம் என்பது மனிதத்தைக் காக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.)
மத நல்லிணக்கம் என்பது அலங்கார வார்த்தையாக பயன்படுத்தப் படும் ஒரு சொல் அல்ல. அது மனப்பூர்வமாக நடை முறையில் செயல் படுத்தப் பட வேண்டிய விடயம்.
மத நல்லிணக்கம் - இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு எல்லா மனிதர்களுக்கும் உள்ளது.
மத நல்லிணக்கம் என்பது இன்றைய உலகின் அவசியத் தேவை. உலகிலே எந்த ஒரு சமுதாயமும், எந்த ஒரு நாடும் தனித்து இயங்க முடியாது என்கிற அளவிற்கு பொருளாதார, சமூக, கலாச்சார இணைப்புகள் அதிகமாகி வருகின்றன.
இந்த நிலையிலே மத நல்லிணக்கம் தவிர்க்க முடியாதது.
எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, அவற்றைப் பாராட்டி, அவற்றை எல்லா மக்களும் பினபற்ற வூக்குவிப்பவன் இந்த உலகத்துக்கு நன்மை செய்பவன் ஆகிறான்.
எனவே உண்மையான மத நல்லிணக்கம் விரும்புபவன் எந்த மதத்தையும் வெறுக்காமல் எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமான கண்ணோட்டத்திலே அணுகுவான்.
எல்லா மதங்களிலும் மனித சமுதாயத்துக்கு நன்மை தரும் கருத்துக்கள் உள்ளன.