ஏறு போல் எக்காளமிடும்
அளவிட இயலா அறிவியலை அகத்துள் வைத்துள்ள
ஆதி மொழியாம் அற்புதத் தமிழ் அணுவே போற்றி
இவ்வுலகு தோன்றும் போதே எதிர் நின்று அழைத்து
ஈன்றவளாய் இருக்கும் எவ்வுயிருக்கும் தாயே போற்றி
உயிர் வளர்க்கும் உணவை உணர்வு தமிழால் ஊட்டி
ஊற்று நீராய் உலகாலும் ஓய்வறியா அமுதே போற்றி
எவ்வகை கேள்விக்கும் எளிய வகை விளக்கமளித்து
ஏறு போல் எக்காளமிடும் எனதருமை தாயே போற்றி
ஐந்து வகை பூதத்தையும் அரவணைத்து காத்து நின்று
ஒளி பொருந்திய முத்தமிழால் ஆளும் கதிரே போற்றி
ஓதுவோருக்கு தெளிவான மதி வளர்த்து நிறைவாய்
ஒளவியம் விலக்கிய குளிர் புனல் தமிழே போற்றியே
- - - - நன்னாடன்.