தீபாவளி

தீபாவளி
வானமெங்கும் சிதறிய வர்ண ஜாலங்கள்
வாய் திறந்து வியக்க வைக்கும் அதிசயங்கள்
கண்கவர் வண்ண வண்ண புது ஆடை யணிகள்
காணும் இடமெங்கும் குதூகலத்தின் பிரதிபலிப்புகள்
குழந்தைகளும் பெரியவர்களும் கூடி மகிழ்ந்து
குடும்பமே கோலாகலாமாய் ஆடிக் கொண்டு
சரவெடியும் ஒளிபூச்சட்டிகளும் ஓசை எழுப்பிட
திக்கெங்கும் தீபங்கள் இருள் நீக்கி வழி அமைக்க
திகட்டாத தின்பண்டங்கள் உமிழ்நீரை வரவழைக்க
விடிகாலை பொழுதில் கங்கா ஸ்தானம் முடித்து
அதிகாலை இருள் அகல தீபங்கள் ஏற்றிஇந்நன்னாளை
தீபாவளி என்றழைத்து குவலயம் முழுதும் கொண்டாடிதே!

எழுதியவர் : கே என் ராம் (18-Nov-20, 3:01 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : theebavali
பார்வை : 40

மேலே