அன்பே
அன்பே ...
____________________________ருத்ரா
பிள்ளையார் சுழியெல்லாம் போட்டு
சிவமயம் எழுதி..
கொஞ்சநேரம்
பேனாவை உருட்டிக்கொண்டிருந்து விட்டு..
எழுதத்தொடங்கினேன்..
அன்பே ..
உன்னை நினைத்து தான்
அன்பே..
சொற்களின் ஓட்டத்தை
தூரத்திலிருந்த என் அப்பாவின் உறுமல்
தடுத்தது..
"உலகம் தழைக்க வந்ததே சைவம்"
கட்டுரை என்னடா ஆச்சு?
அவர் எங்கே வந்து நான் எழுதுவதை
பார்த்துவிடப்பொகிறாரோ என்று..
அன்பே..
அன்பே.. என்று
அன்பே சிவம்..எனத்தொடங்கினேன்.
அன்பே சிவா என்று அது
அந்த காகிதத்தில் குத்திக்கொண்டு
நின்றது!
பரவாயில்லை.
சிவசங்கரி எனும் உன் பெயரை
சிவா சிவா என்று நான்
செல்லமாய்க்கூப்பிட்டது
இப்போது
இந்த நிப்பு நுனியில்
துளிர்த்து நிற்கிறது.
_____________________________________