எல்லா விளக்கும்

இருளை அகற்றிட ஏற்றிடும் விளக்கு
இருக்கும் இடமே ஒளியால் சிறப்பு,
இருட்டு மனிதன் இதயத்தில் இருந்தால்
இதனை ஓட்டிட உண்மையே விளக்கு..

எத்தனை விளக்குகள் வகைகள் பலவாய்
ஏற்றி வைத்தே அழகு பார்த்தாலும்
குத்து விளக்கின் அழகைப் போலக்
குடும்பப் பாங்காய் எதுவும் இலையே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Nov-20, 6:05 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ellaa vilakkum
பார்வை : 88

மேலே