வாசமில்லா மலரிது

மாலை ஆறு மணி மஞ்சள் வானம் நிலவின் உதயத்தால் கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்து கருமைக்கு மாறிக்கொண்டிருந்தது.

பஸ் வருகிறதா இல்லையா என்று எட்டி எட்டி பார்த்தவாறே நின்று கொண்டிருந்தான் பார்த்தீபன்.

நீண்ட நேர தேடலுக்கு பின் பேருந்து வருவதை கண்டான்.
ஆனால்,
படியில் தொங்க கூட இடமில்லாத அளவிற்கு வந்த பேருந்தோ அந்த இடத்தில் நிற்காமல் வேகமாக அவனை கடந்து சென்றது.

பேருந்தின் பின்புறத்தை தட்டியவாறு பலரும் stop stop என்றே கத்தி கொண்டு ஓடினார்.
அதை பார்த்து ஏளனமாய்
சிறித்தவாறு தொங்ககூட இடமில்லை அந்த பஸ்ஸை நிறுத்தி என்ன பண்ண போறாங்கனு உள்ளுக்குள்ளே பேசிகிட்டான்.

சிறிது நேரம் கழித்து வந்த பேருந்தும் இதே போல் வந்தது ஆனால் நிறுத்தத்தில் நின்றவுடன் அதிலிருந்த நடத்துனர் பொறுங்க சார் பின்னாடி வர்ற பஸ்சு ரொம்ப காலியா வருது அதுல போகலாம்னு சொன்னதை கேட்டு பார்த்தீபன் சீக்கிரம் வீட்டுக்கு போய் என்ன பண்ண போறோம் அடுத்த பஸ்லையே போகலாம் என்ற முடிவுடன் அந்த பேருந்திலும் ஏறவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் மிக குறைவாக ஒரு பேரூந்து வந்து நின்றது.
அதில் ஏற முயலும் போது பின்னிருந்தவர் காலில் தட்ட இவன் தவறி பஸ்ஸிற்குள் விழுந்தான்.

அவன் விழுந்த இடத்தில் அழகான இரு பாதங்கள் சலங்கை கட்டி பரதநாட்டிய உடையில்.
தலை நிமிர்ந்து முகம் பார்த்தான்.

பரத நாட்டியத்தின் அனைத்து முக பாவனைக்கும் ஏற்ற ஒரு முகம்.
மீனாய் இரு கண்கள் வில்லாய் புருவங்கள் .உரித்து வைத்த ஆரஞ்சு சுளையாய் இரு இதழ்கள்.இறங்க இறங்க அவள் ஒரு பல்பொருள் அங்காடியாய் காட்சி அளித்தால.

இவன் இரசித்து முடிப்பதற்குள் பின்னிருந்து ஒரு குரல் தம்பி உள்ளே போ பா என்று.

அவள் சற்று விலகி நின்று இவனுக்கு கம்பியை பற்றி எழுந்திரிக்க வழி கொடுத்தால்.

எழுந்து அவளின் பின் நின்று பின்னழகில் SPped breakar ஐ கண்டு அவன் இதயம் பிரேக் ஆனதை உணர்ந்தான்.

எதிரில் இருக்கையின் மேலே இருக்கும் கண்ணாடியில் மாலை வேலை என்பதால் அவள் முகம் பிரதிபலித்ததை கண்டு அதன் வழியே அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

அவன் இறங்கும் பேருந்து நிலையம் நெருங்குவதையும் உணராமல்.
ஆனால் அவள் கீழிறங்க ஆயத்தமானால் .அப்போது சுதாரித்து கொண்ட பார்த்தீபன் நம்ம ஏரியா தானா இவ என்று ஆனந்தத்தில் திலைத்து கொண்டே பஸ்ஸை விட்டு கீழே இறங்கினான்

இவன் வீட்டிற்கு செல்லும் திசைக்கு எதிர் திசையில் நடக்க துவங்கினாள்.
முதல் நாளே பின் தொடர்ந்தாள் நன்றாக இருக்காது என்று இவனும் இவன் வழியில் தொடர்ந்தான்.

இரவு உறக்கத்திற்கு முன் அவளின் நினைவாகவே இருந்தான்.

இரண்டு நாள் கழித்து வழக்கமாக அலுவலகத்துக்கு செல்லும் நேரத்திற்கு முன்பாகவே ஒரு அவசர வேலை காரணமாக புறப்பட்டு சென்றான்.
அப்பொழுது அவனுக்கு ஓர் ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது பேருந்து நிலையத்தில்.
ஆம் ,அவளும் அங்கே நின்று கொண்டிருந்தாள் பேருந்திற்காக.

ஒரு நிமிடம் அவளை கண் கொட்டாமல் பார்த்து கொண்டே அவளை ஒரு முறை சுற்றி வந்து அவளின் முன்னே நின்று.
ஓ, இதுதான் டைமிங்கா நோட் பண்ணுடா பார்த்தி என்று சிறிய புன்முறவலுடன் அவளை பார்த்தான்.

இவனை பார்த்து அவளின் முகங்களிலும் சிறிய சுருக்கங்கள் விழ வெட்க புன்னகை வெளிபட்டது.

அவள் புன்னகைப்பதை
கண்டு இவனின் கால்கள் தரையிலில்லை.
இதே போல் பல வாரங்கள் தூரத்து புன்னகையில் ஓடிக்கொண்டிருந்தது இவர்களின் கதை .

அன்று காலை ஒரு கீரிட்டிங் கார்டு மற்றும் ஒற்றை ரோஜாவுடன் துணிச்சலாக வந்த பார்த்தி .

அவளின் அருகில் சென்று
உங்க பெயர் கூட எனக்கு தெரியாது உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதுல எல்லாத்தையும் எழுதியிருக்கேன் அது கூட என் மொபைல் நம்பரும் இருக்கு முழுசா படிச்சு பாத்துட்டு உங்க பதிலை கால் பண்ணி சொல்லுங்க என்று கார்டை அவள் கையில் திணித்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

இவன் அங்கிருந்து நகர்ந்த சிறிது நேரத்திலே அழைப்பு மணி புதிய எண்ணிலிருந்து .மகிழ்ச்சியில் குதித்து எஸ் என்றவாறு காலை அட்டண்ட் செய்து ஹலோ சொல்லுங்க என்றான்.

எதிர் முனையில் பேச்சே இல்லை வெறும் பெரு மூச்சு மட்டும் பெரியதாக கேட்டது .

பார்த்தி போனில் ஹலோ பேசுங்க ஏன் சைலண்டா இருக்கிங்க அது நீங்கதானு தெரியும்.உங்க பெயராவது சொல்லுங்க என்று சொல்லி முடிப்பதற்குள் கால் கட்டானது.

இவனுக்குள் ஆயிரம் கேள்விகள் ஏன் அவள் பேசவில்லை என்று.
ஒரு வேலை ஊமையாக இருப்பாளோ என்று கூட தோன்றியது.

ஆனால் ,இவனை பார்த்து அவள் தோழியின் காதில் கிசு கிசுத்த நாட்கள் அதை பொய்யென்று உணர்த்தியது.
உடனே அவளின் எண்ணிற்கு குறுந்தகவல்களை பரிமாற தொடங்கினான்.ஏன் பேச மாட்றிங்க.என்னை பிடிக்கலையா.காரணம் சொல்லுங்க பேசாதததுக்கு உங்க பெயரென்ன இப்படி பல கேள்வி கணைகளுடன்.

அன்று முழுக்க அலுவலகத்தில் அவன் இயல்பாகவும் இல்லை அலுவலக பணிகளையும் சரியாக கவனிக்க வில்லை.
மாலை ஐந்து மணியளவில் அவளின் எண்ணில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.

"நான் இன்னும் 1/2 hr ல நீங்க ஏறும் பஸ் ஸ்டாப்புக்கு வந்துடுவேன் நீங்க அங்கேயே காத்திருங்க நாம நேர்ல பேசலாம்.உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா காதல் ஒத்து வராது காரணம் நேர்ல நீங்களே நான் பேசும்போது தெரிஞ்சுக்குவிங்க" .

அதை படித்து விட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி தலை சீவி கண்ணாடியின் முன் நின்று அவளிடம் எப்படி பேச வேண்டுமென்று ரீகர்சல் பார்க்க தொடங்கினான்.

என்ன பெருசா பிரச்சனை இருக்க போது ஜாதி இல்லை மதம் தானே.
நாம ரிஜிஸ்டர் மெரேஜ் பண்ணிக்கலாம் டார்லிங் என்றெல்லாம்.

ஆபிஸ் டைம் முடிவதற்கு முன்னே அவன் மேலாளலரிடம் பர்மிஷன் பெற்று பஸ் ஸ்டாப்பை சென்றடைந்தான்.

அரை மணி நேரத்துல வரேனு சொன்னா.அவ மெஸேஜ் பண்ணி 20 நிமிஷம் ஆகுது.

ஓகே வெயிட் பண்ணுவோம்.காத்திருத்தலும்.
தவித்திருத்தலும் தானே காதலின் இலக்கியம் என்று உள்ளே எண்ணி கொண்டே.அவள் வருவாளா அவள் வருவாளா என்ற பாடலை முனு முனுக்க தொடங்கினான்.

அந்த பேருந்து நிலையத்தில் வந்து நின்ற எந்த பேரூந்திலும் அவள் வரவில்லை அரை மணி நேரமாகியும்.
பொறுமையி­ன் எல்லையை கடந்து அவன் அவளின் தொலைபேசிக்கு கால் செய்தான்,

ரிங் சென்று கொண்டிருந்த வேலையில் அவனின் பின்புறம் இருந்து ஒரு குரல் என்னங்க என்று.ஓசை வந்த திசையில் திரும்பியவனுக்கு இன்ப அதிர்ச்சி.
அவளும் அவளின் தோழியும் நின்று கொண்டிருந்தார்கள் அங்கே.

தோழி பார்த்தியை பார்த்து என்ன சார் ரொம்ப நேரமா வெயிட் பண்றிங்க போல என்று கேட்க

அதற்கு பார்த்தி இல்லை நான் இப்ப தான் லேட் ஆகிடுச்சே அதான் போயிட்டிருப்பிங்களோனு சந்தேகத்துல தான் கால் பண்ணேன் என்றான்்

அதற்கும் தோழி ஐ நாங்க தான் பின்னாடி நின்னு உங்களை அரை மணி நேரமா பாத்திட்டிருக்கோமே.நீங்க பஸ்சில தான் கவனம் செலுத்தினிங்களே தவிர திரும்பி பாக்கவே இல்லை என்று
பார்த்தியின் முகத்தில் இப்போது அசடு வழிந்தது

ஓகே விடுங்க என் பெயர் மாலதி நான் MBA படிச்சிருக்கேன் இரண்டு பேரும் ஒரே ஆபிஸ்ல தான் வேலை செய்யுறோம் அவளும் MBA தான் படிச்சிருக்கா என்று சொல்லி முடிப்பதற்குள்

எதுக்கு இங்க ஒத்து ஊதிட்டு இருக்கு அவ பேசவே மாட்றாளே அப்படி என்ன வென்கம் வேண்டி இருக்கு என்று மனதில் நினைத்து கொண்டே
ஏன் அவங்க பேச மாட்டாங்களா
பெயர் கூட சொல்ல மாட்றாங்க.உங்க பெயர் என்ன சொல்லுங்க என்றான்

பெண்ணிற்குரிய நாணத்துடன் இவனை பார்த்து என் பெயர் குமார் என்றாள்

அளின் குரல் கேட்ட உடன் இவன் இதயத்தில் இடி வீழ்நத்து.
ஆம், கரத்த குரலில் ஒரு ஆணின் குரல் .அது

மனதிற்குள் பதட்டமானவன் அங்கிருந்து திரும்பி பார்க்காமல் நடக்க தொடங்கி ஒரு ஆட்டோவை வழி மறித்து ஏறினான்.

ச்சீ ஒரு உஸ்ஸையா நான்
இவ்ளோ நாளா காதலிச்சேன் என்று புலம்பிக்கொண்டே

அங்கே அவள் கண்களில் நீர் ததும்ப ஓர் மூலையில் இடிந்து போய் அமர்நாதாள் அவள்.

வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில்
அவளிடம் இருந்து ஒரு குறுந்தகவல் பார்த்தீயின் எண்ணிற்கு வந்தது.

அதை பார்த்து கடுப்பாகி டெலிட் செய்ய முற்படும் முன்னே இன்னொரு குறுந்தகவல் அவளிடமிருந்து

"நீங்க என் மெஸேஜ் படிக்காமலே டெலிட் பண்ண போவிங்கனு தெரியும் எனக்காக கொஞ்சம் படிச்சிட்டு டெலிட் பண்ணுங்க ப்ளீஸ்"
இதை படித்தவுடன் மனமிறங்கி முந்தைய மெஸேஜை படிக்க தொடங்கினான்.

"மன்னிக்கனும் சார் நீங்க என் குரலை கேட்டு ஓடுனதுல எந்த தப்புமில்லை.
நான் பொதுவா பொது இடங்கள்ல பேசுறது இல்லை இதனால தான்.
நீங்க என்னை விரும்ப அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.
நீங்க என்ன பாலோ பண்ண ஆரம்பிச்ச உடனே இதை நான் உங்க கிட்ட சொல்லியிருக்கணும்.
ஆனால்,
ஓர் ஆணா பிறந்தேன் வளர்ச்சி மாற்றாத்தாலே பெண்ணா உருவெடுத்தேன் .
என் குணமும் ஒரு பெண்ணிற்குரியதா தான் இருக்கு.
எனக்கும் இதயம்னு ஒண்ணு இருக்கு அதிலும் ஆசைகள் பல இருக்கு உங்களை போலவே.
நீங்க என்ன பாத்தது என் பின்னால சுத்துனது எனக்காக ஏங்குனது எல்லாம் பிடிச்சிருந்தது.காதல்னு ஒரு பீலிங் என் வாழ்க்கையில உங்களால தான் வந்ததே.
அதற்கு நன்றி.
நீங்க எனக்கு கீரிட்டிங் கார்ட் கொடுக்கும் போதே சொல்லியிருப்பேன் .
பட் அப்பவே நீங்க இதே மாதிரி ஓடியிருப்பிங்க.
ஒரு 6 மணி நேரமாவது அந்த பீலிங் எனக்குள்ள இருக்கட்டுங்குற ஆசையில தான் நான் இவ்னிங் வரை உங்களை ஏங்க விட்டது.
மத்தபடி உங்களை காய படுத்தனும்னு எனக்கு எண்ணம் இல்லை.
என்னால உங்க இதயம் காயபட்டிருந்த என்னை மன்னிச்சிடுங்க.

ஆனால்,மறக்க முடியாத நினைவுகள் இதெல்லாம் எனக்கு.
நீங்க என் குரலை கேட்டு ஓடும் போது தான் நான் பண்ண தப்பு எனக்கு புரிஞ்சுது.
இனி உங்களை போல் என் வாழ்வில் யார் வந்தாலும் ஆரம்பத்திலேயே முடிச்சுக்குவேன்.
மீண்டும் ஒரு முறை உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் சார்.
ப்ளீஸ் என்ன மாதிரி இருக்குறவங்களையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க."

இதை முழுதும் படித்ததும் பார்த்தீபனின் கண்கள் கலங்கி நின்றது.
இப்போது தான் புரிந்தது
#வாசமில்ல_இந்த_மலர்களின் இதயங்களும் வசந்தத்துக்காக ஏங்கும் என்று.

எழுதியவர் : மாயோன் (29-Nov-20, 9:29 am)
சேர்த்தது : Mayon
பார்வை : 447

மேலே