அரசியல்

பசியோடு இருக்கும் பச்சிளம் குழந்தையிடமும்
பறித்து தின்னும் அரசியல் வியாதிகள்
ஜனநாயகம் என்றுசொல்லி
பணநாயகத்தில் ஆட்சிநடத்தும்
பணக்காரர்களுக்கு பல்லிளித்து
நடுத்தறவர்கத்தை பணத்தால் அடித்து
ஏழை வர்கத்தை ஏறிமிதித்திடும்
இன்றைய அரசியல்

மக்களாட்சி என்றுசொல்லி
இருப்பவனிடம் பணத்தை வாங்கி
இல்லாதவனிடம் வாக்கை வாங்கி
மக்கள் பணத்தில் பங்குபோட்டு
சொகுசு வாழ்க்கை வாழ்ந்திடும்
இன்றைய அரசியல்

கொள்ளை அடித்தவனோ கொள்ளையன்
ஆனான்
கொலைசெய்தவனோ கொலைகாரன்
ஆனான்
மக்களை ஏமாற்றியவனோ ஏமாற்றுகிறான்
ஆனான்

ஆனால் இவை அனைத்தையும்
ஒருவனே செய்வானாயின் அவனே
அரசியல்வாதி ஆனான்
- இணையத்தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 3:59 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : arasiyal
பார்வை : 2025

மேலே