தன்னம்பிக்கை கவிதை
💪💪💪💪💪💪💪💪💪💪💪
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
💪💪💪💪💪💪💪💪💪💪💪
மண்ணைத் தொடாத
மழையும் இல்லை
கரையைத் தொடாத
அலையும் இல்லை
கண்ணீரைத் தொடாத
கண்களும் இல்லை
குழந்தையை தொடாத
கைகளும் இல்லை
தோல்வியை தொடாத
வெற்றியும் இல்லை....!
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
மரத்தின் வாழ்க்கை
வேரில் உள்ளது
பறவையிின் வாழ்க்கை
சிறகில் உள்ளது
மொழியின் வாழ்க்கை
நாவில் உள்ளது
மலரின் வாழ்க்கை
மணத்தில் உள்ளது
மனிதனின் வாழ்க்கை
இலட்சியத்தில் உள்ளது...!
👊👊👊👊👊👊👊👊👊👊👊
பொன்னை இழந்தாலும்
பொருளை இழந்தாலும்
மண்ணை இழந்தாலும்
மனையை இழந்தாலும்
சொத்தை இழந்தாலும்
சுகத்தை இழந்தாலும்
பணத்தை இழந்தாலும்
பந்தத்தை இழந்தாலும்
தொழிலை இழந்தாலும்
தோழனை இழந்தாலும்
நீ ஏழையே! அல்ல
உன்னிடமுள்ள
"தன்னபிக்கையை" இழக்காத வரை...!!
👉👉👉👉👉👉👉👉👉👉👉
நினைத்ததை
சாதிக்க முடியாமல்
போனாலும்...
சாதிக்க நினைத்ததை
தொடர்ந்து செய்...
அதுவும்
ஒரு சாதனை தான்...
👉👉👉👉👉👉👉👉👉👉👉
சித்திரத்தை தீட்டினால்
காகிதம் கூட பொக்கிஷமாகும்
சிலையாக வடித்தால்
கல் கூட கடவுள் ஆகும்
பக்குவப்படுத்தினாள்
பாலை கூட சோலையாகும்
முறையாகப் பயன்படுத்தினால்
குப்பைக் கூட உரமாகும்
லட்சியத்தோடு வாழ்ந்தால்
உன் வாழ்க்கை கூட
நாளை வரலாறாகும்....!
*கவிதை ரசிகன்*
💪💪💪💪💪💪💪💪💪💪💪

