ஆற்றலிருந்தும்

கற்பனையில் சிலை வடித்தோம்
கடவுள் என பெயரும் வைத்தோம்
சிறப்பான பொருட்களைக் கொண்டு
சிலைகளை தினம் அலங்கரித்தோம்
வண்ணத் துணிகள் பல கொண்டு
வகை வகையாய் அணிவித்தோம்
மின்னும் விளக்கைக் கொண்டு
விண்மீன்களை மண்ணில் கண்டோம்
நெல்லரிசியில் உணவைச் செய்து
கற்சிலைக்கு படையலிட்டோம்
தங்கத்தகட்டால் கவசம் செய்து
தனவானாய் கடவுளை வைத்தோம்
மனதினுள் தோன்றியதை எல்லாம்
மாற்றாமல் எழுதி வைத்தோம்
எழுதிய வாக்கியங்கள் யாவற்றையும்
செழுத்த வேதம் என்றோம்
எதிர்த்து வாதிட்ட யாவரையும்
நீசப்பிறவி என்று ஏசி ஒதுக்கிவைத்தோம்
ஒருவகை ஓசைக் கொண்டு
ஓதுமுறையை மந்திரம் என்றோம்
ஓதுவோரை சாமி என்று
ஒவ்வொருவராய் பொருள் கொடுத்தோம்
ஓதுவோன் உச்சரிப்பையே
மொழியென்று அங்கிகரித்தோம்
கள்ளத்தனமாய் சொன்னதையெல்லாம்
கடவுள் வார்த்தை என்று போற்றினோம்
கிளியைப் போல் நம்மைப்பழக்கி
கீழ்த்தரமானவன் நீ என்றபோதும்
கீழ்ப்படிந்து ஒத்துக் கொண்டோம்
ஆறடி உயரங்கண்டு பயந்தே
ஆரியத்தானிடம் அடங்கிபோனோம்
வீரத்தால் சிறந்தோரைக்கண்ட
ஆரியத்தானின் நஞ்சு அறிவு
ஆளுவோரை மயக்கியதாலே
ஆன்மீகம் என்ற ஒன்றால்
அன்னைத்தமிழை ஏளனிப்பதோ
ஆற்றலிருந்தும் நாம் அறிவிழந்திருப்பதோ?
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Dec-20, 8:18 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 40

மேலே