காதல்

முழுமதி முகமும் கார்மேகக் குழலும்
சுழலும் கெண்டைமீன் கண்களும் நீண்ட
வலம்புரி சங்கொத்த காதும் பவளவாயும்
யவ்வனத்தில் விம்மிய தனங்கள் இரண்டும்
அதை மூடி மறைக்கும் மேலாடையும்
உள்ளழுந்திய வயிறும் அதன்கீழ்
வெற்றிலைக் கொடி போல சிற்றிடையும்
வாழையின் தண்டொத்த கால்களும்
சிவந்த தாமரைபோல் பாதம் இரண்டும்
தாங்கிய வடிவழகு சிலைபோல்
நிற்க கண்டேன் அருகில் சென்றேன்
சிலையா இது என எண்ணி
புன்னகைத்த சிலை சிரித்து நகர்ந்தது
என்நெஞ்சில் காதல் தீமூட்டி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Dec-20, 1:38 pm)
Tanglish : kaadhal
பார்வை : 270

மேலே