காதல் பிரிவு

கண்களோடு கதைபேசி,
காதல்வலை தினம் வீசி;
இமைகளிலே எனைப்பூட்டி,
விழிகளிலே கனவூட்டி;
மறக்காத நினைவுகளோ,
மனதிற்குள் உலாவர;
தனிமையின் வலிகளோ,
தன்னிலை நிதம் மறக்க;
வசித்திட்ட இதயமோ,
நிழல்படமாய் நெஞ்சுருக;
கண்ணீர்க் கதைகளாய்,
இதயத்திலே வழியுதடி..

எழுதியவர் : ஆ‌.பிரவின் ராஜ் (5-Dec-20, 7:30 am)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
பார்வை : 157

மேலே