நீபிரிய உயிர் நிலைக்காது
நீபிரிய உயிர் நிலைக்காது
நேரிசை வெண்பா
என்னைவிட்டு நீயும் பிரியா விடின்சொல்வாய்
அன்றில் விடுத்திடச் சொல்வேன்கேள் -- சென்றுபின்
நீதிரும்ப நானுலகை நீத்திருப்பேன் ஆதலின்
மீதமிருப் போர்வசமே சொல்
குறள். 1/8
..........