பெளர்ணமதி தோறும்

அழுக்கு துணியில் ஏறும் மெதுவாய்
அதனை அடிச்சு துவைக்கணும் பதமாய்
தீயவை பற்றும் நம்மை மெதுவாய்
தேவையில்லா.துயர் வரும் பொதுவாய்

உழைக்கும் திரவியங்கள் யாவும்
உண்பதற்கும் மட்டுமே சரியாய்
பிழைப்பதற்கு எவற்றைச் சேர்த்து
உய்ய முடியுமே இந்தப் புவனத்தே

ஒப்பனைக்கு ஒய்யார உடைக்கு
ஒவ்வொரு ஆண்டிற்கான கல்விக்கு
ஓங்கி வளரும் அன்புக் குழந்தைக்கென
ஒருமித்த திரவங்கள் சேர்க்க முடிமோ.

பெளர்ணமதி தோறும் மருத்துவமனைக்கும்
திங்கள் தோறும் இனிப்பு நோய்க்காக மருந்துக்கும்
உற்றார் உறவினர் நிகழ்ச்சி துக்க நிகழ்வென
உரியதற்கு எவ்வகையில் திரவியம் சேர்ப்பதோ

கூலி வேலையில் கிடைப்பதோ ஐந்நூறெனில்
சுற்றத்தார் விழாச் செலவுக்கு முன்னூறெனில்
சோற்றுக்கு நீருக்கு சுவையான நொறுக்குக்கென
குறைந்தத் தொகை ஐந்நூறு வேணுமே வாழ .

பிழைப்பதற்கே பிழைச்செயல் செய்ய வேண்டுமோ
பிழை செய்வரோடு துணிந்து இணைய வேண்டுமோ
பிறர் பொருளை களவாடி உரிமைக் கொள்ளணுமோ
பிறந்ததால் உருவான பாவத்திற்கு இறக்கணுமோ.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Dec-20, 5:47 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 98

மேலே