கண்ணை காட்சிகள் மயக்கும்
![](https://eluthu.com/images/loading.gif)
தரமான தொழிலை யெல்லாம்
தனிநபர் செய்வார் என்று
தகவிலார் உருவத்தை நம்பி
தருவது அரசின் தர்மமோ
அரிய உலகின் பொருளை
அறமில்லா முறையில் தினமும்
அறிவியல் வளர வேண்டியே
அழித்து சிதைப்பது முறையோ
மயங்கும் மனித மூளையை
மரணபய விளம்பரம் செய்து
மணிக்கு மும்முறை காட்டி
வியாபாரத்துள் இழுப்பது சரியோ
கண்ணை காட்சிகள் மயக்கும்
கடமையை காசுகள் மாற்றும்
கருணையை போட்டிகள் சிதைக்கும்
காக்க வேண்டிய அரசே தரகராய்
பணத்தை தலையில் சுமந்து
பயிரிடுவோருக்கு மரணபயம் தந்து
விதையில் இரசாயனத்தை கலக்கும்
கள்ளன்களை அரசு காப்பதோ.
----- நன்னாடன்.