அள்ளிவிடும் அழகே

அள்ளிவிடும் அழகே
******
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தாட துள்ளி விழும் கயலினங்கள் ஆற்றினில் மகிழ்ந்தாட
குள்ள நிலை வாத்துக்கள் தண்நீரில் சுற்றிவர
தெள்ளு தமிழ்ப் பாடல்கள் சேயரினம் பாடிவர அள்ளிவிடும் அழகினில் என் கனவில் வந்தவளே
பொல்லாத உன் நினைவு எம்மனச வாட்டுதடி துள்ளியே வருவாய்நீ செந்தமிழ்ப் பள்ளுபாடி

எழுதியவர் : சக்கரை வாசன் (1-Jan-21, 8:12 am)
Tanglish : allividum azhage
பார்வை : 601

மேலே