ஒரே ஒரு நாள்...

⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰

நமக்காக
எத்தனையோ முறை
அழுதிருக்கிறோம்.....
மற்றவர்களுக்காக
எத்தனை முறை
அழுதிருக்கிறோம்?

நம்மை
எத்தனையோ முறை
சந்தோஷப்படுத்தி இருக்கிறோம்... அடுத்தவர்களை
எத்தனை முறை
சந்தோஷப்படுத்தி இருக்கிறோம்?

நமக்காக
எத்தனையோ முறை
பொருள் வாங்கி இருக்கிறோம்.... மற்றவர்களுக்காக
நீ எத்தனை முறை
பொருள் வாங்கி இருக்கிறோம்...?

நமக்காக
எத்தனையோ முறை
இரவில் உறங்கியிருக்கிறோம்
ஒரு முறையாவது
மற்றவர்களுக்காக
எத்தனை முறை
விழித்திருக்கிறோம்..?

நமக்காகவே
ஒவ்வொரு நாட்களும்
வாழ்கிறோம்
ஒரு நாட்களாவது
நீ பிறருக்காக
வாழ்ந்துப் பார்ப்போம் ?

⏱️⏱️⏱️⏱️⏱️⏱️⏱️⏱️⏱️⏱️⏱️

நல்ல விஷயங்களை
கேட்பவர்களை விட
நல்ல விஷயங்களை
படிப்பவர்கள் குறை

நல்ல விஷயங்களை
படிப்பவர்களை விட
நல்ல விஷயங்களை
பேசுபவர்கள் குறைவு

நல்ல விஷயங்களை
பேசுபவர்களை விட
நல்ல விஷயங்களை
நினைப்பவர்கள் குறைவு

நல்ல விஷயங்களை
நினைப்பவர்களை விட
நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்துபவர்கள் குறைவு...

*கவிதை ரசிகன்*

⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰

எழுதியவர் : கவிதை ரசிகன் (4-Jan-21, 8:55 pm)
Tanglish : ore oru naal
பார்வை : 80

மேலே