சுழலும் போது

யாவரும் கேளுங்கள் யாவரும் கேளுங்கள்
பூதமும் பேய்களும் உருவங்கொண்டே உலகில்
எங்கேயும் இல்லை யாருங்கண்டதில்லை
உடைமையில்லை உடலென்று உயிர்போன பின்னே
உயிர்பேயாய் உலவும் என்பதெல்லாம் பொய்யே

வட பக்கம் புவியின் தலைப்பாகம் எனலாம்
தென்கோடி என்பது பாதப்பகுதி ஆகுமே
சுழலும் போது புவிக்கு சுழல்விசையின் ஈர்ப்பால்
துருவங்களிரண்டில் பெரும் விசை எழுமே
வடதுருவம் உலகின் உயர்ந்த நிலை எனலாம்

பிறந்தோர் இறந்தால் உயர்நிலை அடைவதாய்
இருக்கும் பிறந்தோர்கள் எண்ணும் எண்ணத்தால்
வடபுறம் மேன்மை பெற்றதாய் எண்ணியே
வாழ்ந்து இறந்தவர் முகங்கள் வடக்கு நோக்கியே
துயிலும் போது வடக்கே தலைவைத்தல் தவறில்லை

காரணங்கூறும் கதையளக்கும் நண்பர் யாரேனும்
கண்டதில்லை உண்மையை உண்மை அதிலில்லையே
கவின் வாழ்க்கையை பிழையின்றி வாழ்ந்தாலே
இறையுணர்வைப் பற்றி இவ்வுலகை அகலலாம்
இறையுணர்வு என்பது இடரின்றியே வாழ்வதாம்
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Jan-21, 10:45 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : sulalum bodhu
பார்வை : 58

மேலே