பிச்சைக்காரன்

இவன் இன்றைய பிச்சைக்காரன்
கையில் 'கைப்பேசி'
யாரிடமோ பேசி கொண்டிருக்க
கொஞ்சம் அருகில் சென்று கேட்டேன்
'வட்டிக்கு விட்ட பணத்திற்கு ' வட்டி
வசூலில் தாமதம்.......
பணம் வாங்கிய நபரை இவன் மிரட்ட...
என்னை அருகில் கண்டதும்
கைப்பேசி காணாமல் போனது
'ஐயா , இந்த முடவனுக்கு கொஞ்சம்
தயைக் காட்டுங்க........... என்கின்றான்

இப்படியும் பிழைப்பு இங்கு
இது நேரில் கண்டது
முற்றும் நிஜமானது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Jan-21, 6:51 pm)
Tanglish : pichaikkaran
பார்வை : 75

மேலே