இரண்டு வரி புரட்சி
வாழ்க்கை சேறானால்
என்ன? நீ தாமரை
ஆகிவிடு.
விண்ணை எட்டப் பார்,
மலைமுகடாவது கிட்டும்.
ஆகாசத்தில் கோட்டை கட்டு
தப்பில்லை, ஆனால் அதன் அடிக்கல்லை உன்
அறிவு நடட்டும்.
பொறுமை கடலினும் பெரிது,
ஆனால் அதிலேயே
மூழ்கி விடாதே.
மனசாட்சி என்பது ஒன்றும்
இல்லை, உன் ஆன்மாவின்
குரலே.
'கோபம்' என்பது
ஒன்றுமில்லை ,
உன்னில் இருக்கும்
எதிரி.
'சந்தேகம்' என்பது
உணர்வல்ல,
ஒரு கொடிய நோய்.
நீ அழும்போது
விதி சிரிக்கிறது,
நீ எழும்போது
விதி அழுகிறது.