இயற்கை இறைவன்

மலையே மாலானது வடவேங்கடமாய் திருமலையாய்
மலையே சிவமயமாய் சிவமாய் சிந்தைகவர்ந்து கண்முன்னே
காட்சி தருகிறதே மானஸரோவரம் சூழ மாமலையாய்
சிவலிங்க ஸ்வரூபமாய் கைலையங்கிரியாய் பனிமலையாய்
காணும் பொருளிலெல்லாம் காட்சி தருவான் இறைவன்
காண நினைப்போருக்கு கண்கொளா காட்சி எல்லாம் தரும்
நம்மைக் காப்பவன் அவன் காவலன் நமக்கெல்லாம் அவனே

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (12-Jan-21, 6:59 pm)
Tanglish : iyarkai iraivan
பார்வை : 149

மேலே