பொங்கல் திருவிழா

பொங்கல் திருவிழா

பூமியில் உழைத்த கைகளில் வியர்வை வழிந்திட
பூட்டிய மாடுகள் ஏர் இழுத்து களைத்து உறங்கிட
மழைமேகம் கொண்டுவந்த தண்ணீரை பொழிந்திட
காணும் காட்சிகள் யாவும் பசுமை பெற்று பொலிந்திட
தைமாதம் பிறந்து வாழ்வில் நம்பிக்கை வளர்ந்திட
களத்தில் கதிர் சாய்ந்து நெல் விளைந்து நின்றிட
ஏர் பூட்டிய கைகளில் கதிர் கட்டுகள் நிறைந்திட
புதுப்பானையில் கட்டிய மஞ்சள் அழகுடன் விளங்கிட
கூடவே கரும்பும் வெல்லமும் மங்கள பொருள்களுடன்
அறுவடை செய்த நெல் அதனை பொங்கி எடுத்து
முகத்தில் புன்னகையுடன் புத்தாடையும் அணிந்து
பொங்கலோ பொங்கல் எனக்கூவி அழைத்து
பகலவனை கொண்டாடும் ஒரு பெரு விழா
இப்பொங்கல் திருவிழா என நாம் அறிவோமே

எழுதியவர் : கே என் ராம் (13-Jan-21, 9:10 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : pongal thiruvizaa
பார்வை : 103

மேலே