என்ன கொடுமை சரவணன் இது

சரவணன் லவ்வர் , சரவணன் ஆளுனு எல்லோரும் கூப்பிட்டு கூப்பிட்டு அவள் பெயரே அவளுக்கு மறந்து போகும் போல. ரொம்ப ஓவர் ஆஹ் இருக்கேனு நீங்க நினைக்கலாம். நீங்க நம்பளனாலும் அதான் நிஜம். சும்மாவா, ஸ்கூல்லேந்து லவ்வு.
முதலில் ஒரு ஈர்ப்பு. சரவணன் அப்போ bad-boy-mode ல இருந்த டைம். அப்பயே அவன் மேல் ஒரு வசீகரம். நாள் ஆக ஆக பேட் பாய் சரவணன், குட் பாய் ஆஹ் மாறினான். ரொம்ப கருத்தா பேசினான். அப்பறம் என்ன லவ் தான்.
ஸ்கூல்ல ஆரம்பிச்ச லவ் காலேஜ்லையும் வெற்றிகரமா தொடர்ந்தது. சரவணன் எப்போதுமே கல்யாணத்த பத்தி பேசுவான். அப்போ அவளுக்கு அவளோ foresight லாம் இல்ல. ஆனா அவ ஆளோட அறிவு அழகு திட்டமிடல் எல்லாத்தையும் நினச்சு பெருமைபட்டுப்பா. நாளாக நாளாக காதலும் மிகுதியாச்சு. காலேஜ் உம் முடிஞ்சாச்சு.
சரவணன் வேலைக்காக வெளியூர் போனான் குட் பாய் சரவணன் இப்போ ஆன்மீகத்துல மிகுதியா ஈடுபாடு காட்டினான். அந்த ஊர்ல அவனுக்கு ரொம்ப நல்ல பேரு. இவளுக்கு பெருமைக்கு சொல்லவா வேணும். அவள் தோழிக்கெல்லாம் கல்யாணம் ஆக ஆரம்பிச்சுது. ஒரு ரெண்டு மூணு வருசத்துல எல்லோருக்கும் கல்யாணம் முடிஞ்சுது. சரவணா நம்ம கல்யாணம் எப்போ என்கிற கேள்விக்கு காலம் நேரம் சரியா அமையனும் ,கல்யாணம் சரியான நேரத்துல பண்ணனும், நாம அதுக்கு நிறைய திட்டமிடனும் வேலை செய்யணும்னு சொல்வான். அவன் சொல்றதுல ஒரு நியாயம் இருந்துது. சரவணன் எது பண்ணாலும் செம்மையா பண்ணுவான். அவளுக்கு காதலும் பெருமையும் இன்னும் அதிகமாச்சு.
அவள் தோழிக்கெல்லாம் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஊட்டிவிட்டுக்கிட்டே “ஏய் அந்த சரவணன நம்பாதடி” சொன்ன தோழிகள் ஏராளம். அவங்களுக்கு பல எமோஷன்ல பதில் குடுத்துருக்கா. இப்போ சரவணன் கூட பேசறப்போ கல்யாணோத்தோட குடும்பம்,குழந்தை அதுக்கான திட்டமிடல் பத்தியும் பேச ஆரம்பிச்சாங்க. ஒரு குழந்தைய வளர்க்க தேவையான அளவு பணம் , மனமுதிர்ச்சி எல்லாம் வேணும்னு சரவணன் சொன்னான்.
ஆனா இப்போ காதல் பெருமையை விட, சரவணா அதுக்கு மொதல்ல நம்ம கல்யாணம் பண்ணனும்டானு கத்தனும் போல இருந்தது. பல மாதங்களுக்கு அப்புறம் கத்தவும் செய்தாள். சரவணன் அழுத்தத்தை உணர்ந்தான். இப்போ இல்லனா எப்பவும் இல்ல, கல்யாணத்த அடுத்த மாசமே வெச்சுக்கலாம் னு முடிவு எடுத்தாங்க.
அவபட்ட சந்தோசத்தை நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா. இவ்வளவு நாள் பண்ண எல்லா திட்டத்தையும் செயல் படுத்த சரியான நேரம் னு சரவணன் சொன்னான். இப்போ அவளுக்கு ரொம்ப பெருமை,ரொம்ப காதல். என் உயிரே போனாலும் அது உனக்காக தான்னு அவன் சொன்னப்போ அவளுக்கே தெரியாமல் கண்ணீர் வந்தது.
பரபரப்பா கல்யாண வேலை நடந்துட்டு இருக்கு. கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தான். சரவணன் திட்டமிட்ட மாதிரியே சிறப்பா பண்ணிடணும்னு அவ கிட்டத்தட்ட அவள் வீட்டாருக்கு கட்டளையே போட்ருந்தா. ஊர்ல எல்லோருக்கும் சந்தோஷம் தான், அப்பா, ஒரு வழியா இவளுக்கு கல்யாணம் ஆகுதுன்னு.
அப்போ அவளுக்கு ஒரு லெட்டர் வந்தது. சரவணன் தான். இவளோ பரபரப்புலையும் இவனுக்கு லவ்ஸ் பாரேன்னு வெட்கப்பட்டுட்டே தொறந்தா. “As I am suffering from Fever, I cannot attend the marriage. Kindly cancel the marriage. Yours faithfully, Saravanan”.
அப்போ உடைஞ்சு கீழ உக்காந்தவதான். ஆனா அவ வீட்ல எல்லோரும் கோவம் ஆகி சரவணன் வீட்டுக்கு போய் போராட்டம் பண்ணாங்க. ரெண்டு நாளுக்கு அப்புறம் மறுபடியும் ஒரு லெட்டர். நான் முடிவு எடுத்தது, எடுத்தது தான். நீங்க போராட்டம் பண்றது வேதனை அளிக்கிறது.
கதம் கதம்.

எழுதியவர் : தாரிணி உதயகுமார் (15-Jan-21, 1:41 am)
சேர்த்தது : dhariniu
பார்வை : 858

மேலே