சொர்க்கம் நரகம் எங்கே

வாழ்க்கை
அளவுக்கு அதிகமான
வலிகளை
கட்டுரை வரிகளை போல
அழகான எழுத்துக்களால்
அடித்தல் திருத்தலின்றி
கொண்டுபோகிறதா ?

நரகத்திலிருக்கிறீர்கள் என்று
பொருள் கொள்வீர்!

பாவங்களை தொலைத்துக் கொண்டுள்ளீர் மெல்ல மெல்ல!

சொர்க்கமோ நரகமோ நிச்சயம் விண்ணிலில்லை அது மண்ணிலே!

பிறப்பு முதல் இறப்புக்குள்ளே ஒருவனின் பாவங்களும்
புண்ணியங்களும் படியளக்கப்படுவதென்பது உண்மை!

புரிந்தவர்கள் புண்ணியக்கணக்கை தொடங்கலாம்....

ஆனால் செய்த பாவங்கள்
நிச்சயம் நிகழ்காலத்திலே
முழுமையாக தண்டனையென முற்றுப்பெறுவதென்பதை தடுக்க இயலாது!

வாழ்க்கை என்பதிதுதான் என்றொறு புள்ளியில் புலப்பட்டவர்களுக்கு இந்த வரிகளை உணர்வது எளிது!

ஒன்பதிலோ என்பதிலோ
ஆறிலோ நூறிலோ
என எவ்வயதிலும் புலப்படலாம் வாழ்வியல் இதுவேதான் என்றதொரு புள்ளி!

எழுதியவர் : மன்னை சுரேஷ் (17-Jan-21, 1:18 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 49

மேலே