தமிழன்னை

அம்மாவின் அன்பு ஆழமானது ;
அப்பாவின் பண்பு தூய்மையானது ;
ஆசானின் அறிவு அமிர்தமானது ;
ஆதி பகவனின் வரம் தமிழானது;
அ*ப்பைந்தமிழ் உயிர்மெய்யென பிறந்து,
மூன்று இனமென வளர்ந்து ;
ஆ*யக்கலைகள் அறுபத்திநான்கென உருமாறி;
இ*த்தரணியெங்கும் இனிமை பொங்க உலா வருகிறாள்;
ஈ*ரசைச்சீருமாய்;ஈரடுக்கொலியுமாய் புன்னகைபாள் ;
உ*யித்துணர்வு கொண்டே நடைபோடுவாள்;
ஊ*ர்மிமாலிபோல் எங்கும் வீற்றீருப்பாள் ;
இதை உணர்ந்தே ;
எ*ம்முன்னோரால் வணங்கப்பட்டாள்;
ஏ*காதிபதியாய் ஆட்சி செய்கிறாள்
உலகமொழிமண்டபத்தில்;
ஐ* வகை ஒழுக்கத்தை கற்பித்தாள் ;
ஒ*ட்பம் மிகுந்தே காணப்பட்டாள்;
ஓ*ங்காரியாய் எங்கும் நிறைந்திருந்தாள்;
ஒள*வ்வையாரும் இவளிடமிருந்தே பிறந்தாள்;
ஃ* காய் எக்காலமும் நிலைப்பெற்று இருப்பவளே;
நம் *தமிழன்னை*
இவளாலே இலக்கியங்கள் பிறக்கபட்டன,
இதானால்தான் என்னவோ !
அன்னியருக்கும் காதல் பிறந்தது ; இவளை மொழி பெயர்த்திட;
இச்செம்மொழி கொண்டே புதுக்கவிதைகளும்தோன்றுகிறது ;
அத்தோன்றலின் வாயிலாக
உங்களை காண்பது : *சிம்மயாழினி*

எழுதியவர் : ❤சிம்மயாழினி ❤ (17-Jan-21, 4:27 pm)
சேர்த்தது : சிம்மயாழினி
பார்வை : 1289

மேலே