நகைச்சுவைத் துணுக்குகள் 32

என்ன டார்லிங், அந்த ஆளையே உத்துப் பாத்துக்கிட்டு இருக்கே.

அவன்தான் என்னோடே முன்னாள் ஹஸ்பெண்ட். பாவம் அவனை நான் டைவர்ஸ் செஞ்சு எட்டு வருஷம் ஆச்சு. இன்னும் விடாம குடிச்சிக்கிட்டே இருக்கான்னு கேள்விப்பட்டேன்.

அடே அப்பா. எட்டு வருஷமாவா அந்த நல்ல சமாசாரத்தைக் கொண்டாடிக்கிட்டு இருக்கான்? கொடுத்து வெச்சவன்.
***********
ஃபிரிட்ஜ்லேயிருந்து அப்படியே சாதத்தைக் கொண்டுவந்து போடறியே அம்மணி. இந்த ஜிலுப்பு எனக்கு உடம்புக்கு ஒத்துக்காது. இதை மைக்ரோவேவ்லே கொஞ்சம் சூடு பண்ணின அப்புறமா போடு தாயே?
***********
*கல்லூரி ஆசிரியர்: ஏன் இன்னிக்கி இவ்வளவு லேட்டா கிளாசுக்கு வர்ற?
மாணவி: என்ன ஒருத்தன் ஃபாலோ பண்ணிட்டே வந்தான் சார்!
ஆசிரியர்: அதனால என்ன?
மாணவி: அவன் ரொம்ப ரொம்ப மெதுவா நடந்து வந்தான் சார்!
***********
ஏங்க சமையற்காரியை நிறுத்திட்டு இனிமேல் நானே சமையல் செஞ்சுடறதா தீர்மானிச்சுட்டேன். சமையல்காரிக்குக் கொடுக்கிற சம்பளத்தை இனிமேல் எங்கிட்டே கொடுத்துடுங்க.
உனக்கு எதுக்கு சம்பளம்?. நீ சமைக்க ஆரம்பிச்சவுடனேயே மொத்த இன்ஷ்யூரன்ஸ் பணமும் உனக்குத்தானே வரப்போகுது.

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (23-Jan-21, 7:20 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 96

சிறந்த நகைச்சுவைகள்

மேலே