கண்ணம்மா

கவிதை உலகின் காதலி
விவரிக்க இயலா
கவிதை அவள்
விவரிக்க அஞ்சும்
கவிதையும் அவளே

என்ன வசீகரம்
அந்த பெயரில் 
பயன்படுத்த ஏன்
இவ்வளவு தயக்கம்

எத்தனை கவி தொடுத்தாலும்
அவளுக்கு தொடுத்த
கவி மட்டும் ஏனோ
முற்றுப்பெறவில்லை
பல ஆண்டாக
யார் அந்த கண்ணம்மா ???

தேவதையை மிஞ்சும்
பேரழகியா ? இல்லை
கவியை ஆளும் இளவரசியா ?

பேரழகி என்றால்
கண்ணதாசனிடம்
சிறை பட்டிருப்பாள்
இளவரசி என்றால்கூட
கம்பனிடம் சிறை பட்டிருப்பாளே

சிறைக்குள் அடங்காதவள்
சிரைகளை கடந்து
மனதை உலுக்குகிறாள்

எதிலும் அடங்காது
விலகி நிற்கிறாள்
ஆனால் எளிதில்
உள்ளம் கவர்கிறாள்

உருவமற்று திகழ்கிறாள்
ஆனால் கோடி உருவம்
கொண்டிருக்கிறாள்
ஒவ்வொரு கவியிலும்

அவளை விரும்பாத
கவிஞன் இங்கில்லை
அதே தருணம் அவளை
திருப்திபடுத்திய கவிஞனும்
இங்கில்லை 

கற்பனை உலகில்
பல கவிகளில் அவள்
வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
அவளை திருப்திபடுத்த
பல கவிகள் முயல்கின்றன
வெற்றி கிட்டிய பாடில்லை

ஆம் கண்ணம்மா யாரும்
விவரிக்க இயலாத
கவிதை உலகின் காதலி

எழுத்து சே.இனியன்

எழுதியவர் : எழுத்து சே.இனியன் (23-Jan-21, 10:37 am)
சேர்த்தது : இனியன்
Tanglish : kannamma
பார்வை : 339

மேலே