தூய்மைப் பணியாளன் தூய மனம் படைத்தவன்

தூய்மைப் பணியாளன் தூயமனம் படைத்தவன்

மாநகர கழிவுகள் ..
மக்காத குப்பைகள் ..
சாக்கடையின் வாசங்கள் ..
சாலையோர சகதிகள் ..

என அத்தனையும் பழகிவிட்டது எங்களுக்கு!

ஒட்டிய வயிற்றின் ஒரு வேளை உணவிற்காக ..
கழிவுகளை கூட கையாலே சுத்தம் செய்கிறோம் பலரது நன்மைக்காக ..

கறைப் படிந்தன எங்கள் கரங்கள் ..
கறைப் படிந்த எங்கள் கரங்களால்,
கரையப்பட்டிருக்கின்றன பலரது பாவங்கள்..

இருப்பினும்

வகுப்பறை முதல் கழிவறை வரை நாங்கள் பழிக்கப்படுகின்றோம்..
பாவப்பட்டவர்களாகவே நாங்கள் ஒதுக்கப்படுகின்றோம்...

இறைவனால் படைக்கப்பட்ட எங்களை இழிவு படுத்துவதுமேனோ ?
இல்லங்களை மட்டுமல்ல ..
இந்திய தேசத்தையே தூய்மைப்படுத்தும் நாங்கள் ..
இந்தியாவின் அரண்கள் தானோ ..!!!

எழுதியவர் : RIYAS QUOTES (23-Jan-21, 12:00 pm)
சேர்த்தது : Riyas quotes
பார்வை : 40

மேலே